TNPSC - மின்சார வாரியத்தில் வேலை - 1794 காலியிடங்கள் - சம்பளம்: Rs.18,800 முதல் - Last Date to Apply 02.10.2025
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 400 உதவி பொறியாளர் மற்றும் 1,850 கள உதவியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி-யின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் இப்பணியிடங்கள் நிர்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
மொத்தம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இதற்கான தேர்வு வரும் நவம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 2-ம் தேதி வரை பெறப்படுகிறது.
TNPSC கள உதவியாளர் பணி விவரங்கள்
டிஎன்பிஎஸ்சி மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு பல்வேறு துறையில் இருக்கும் தொழில்நுட்ப பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. அந்த வகையில், மின் வாரியத்தில் உள்ள பணியிடங்களை நிரப்பும் வண்ணம், 1,794 கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஐடிஐ தகுதிக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு இந்தாண்டு இரண்டாம் முறை நடத்தப்பட உள்ளது.
இதில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக தேவையான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு
இப்பதவிக்கு 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக பிசி, எம்பிசி பிரிவினர் 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வரையும் இருக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 44/47 வரை தளர்வு உள்ளது. முன்னாள் ராணுவத்தினர் 55 வரையும், கணவரை இழந்த பெண்களுக்கு 37 வரையும் தளர்வு உள்ளது. இதர பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகபடியான வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக கள உதவியாளர் பணிக்கு எலக்ட்ரீஷியன் அல்லது வையர்மேன் அல்லது சிறப்பு திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக்கல் தொழிற்பிரிவு ஆகிய ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ்/ தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இதே பாடப்பிரிவுகளில் உயர்கல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.
சம்பள விவரம்
1,794 கள உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊதியத்தில் பள்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நிலை 2 கீழ் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - II ஒரு கட்ட தேர்வாக நடத்தப்படும். இரண்டு தாள்கள் கொண்டு நடைபெறும். இதில் தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு மற்றும் நுண்ணறிவு ஒரு தாளாகவும், பாடப்பிரிவு ஒரு தாளாகவும் இடம்பெறும். மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு தேர்வு கணினி வழியில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவினர் 195 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். தமிழி தாளில் 60 மதிப்பெண்கள் கட்டாயம். இதர பிரிவினர் மொத்தம் 240 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இத்தேர்வு கொள்குறி வகையில் அமையும். கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெறும்.
முதல் தாள் 10-ம் வகுப்பு தரத்திலும், இரண்டாம் தாள் ஐடிஐ தகுதி தரத்தில் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் உடற்தகுதித் தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். உடற்தகுதித் தேர்சில் தேர்ச்சி பெறுபவர்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடும் பின்பற்றப்பட்டு, மூலசான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். கலந்தாய்வின் மூலம் பணி நியமனம் வழங்கப்படும்
- Written Test
- Certificate Verification
- Physical Test
விண்ணப்பிக்கும் முறை
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு - II விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://apply.tnpscexams.in/ இணைப்பில் தேர்வர்கள் அவர்களுக்கான OTR கணக்கை தொடங்க வேண்டும். தொடர்ந்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாக தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டண தளர்வு குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
- விண்ணப்பம் தொடக்கப்பட்ட நாள் - 03.09.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் - 02.10.2025
- விண்ணப்பம் திருத்தம் செய்ய கால அவகாசம் - 06.10.2025 முதல் 08.10.2025
- முதல் தாள் தேர்வு நாள் - 16.11.2025 காலை 09.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை
- இரண்டாம் தாள் தேர்வு நாள் - 16.11.2025 பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை
மின் வாரியத்தில் வேலை எதிர்பார்ப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி மூலம் இந்தாண்டே நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பை முழுமையாக படித்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
- One Time Registration Fee – Rs.150/-
- Examination Fee – Rs.100/-
Fee Concession:
- Ex-Servicemen – Two Free Chances
- BCM, BC, MBC / DC – Three Free Chances
- Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
Important Links
TNEB - TNPSC Recruitment - Notification | |
TNEB - TNPSC Recruitment - Online Application | |
TNEB - TNPSC Recruitment - Official Website |


No comments: