12th, Degree - அரசு மருத்துவமனையில் வேலை - 21 பணியிடங்கள்
நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Recruitment from the Urban Health and Wellness Centre and Siddha at the Government Medical College Hospital, The Nilgiris District.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர், பல் மருத்துவம், சித்தா தெரபிஸ்ட் உதவியாளர், ஆடியோலாஜிஸ்ட், டெல்டர் டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மருத்துவ அதிகாரி 2, மருத்துவ அதிகாரி (யுனானி) 1, பல் மருத்துவம் 1, இடைநிலை சுகாதார வழங்குநர் (Mid level Health Provider) 4, சித்த தெரபிஸ்ட் உதவியாளர் 3, MTM சுகாதார ஆய்வாளர் 1, ஆடியோலஜிஸ்ட்/ பேச்சு பயிற்சியாளர் 2, ப்ரோகிராம் உடன் நிர்வாகம் 1, பல் டெக்னீஷியன் 1, ஆப்டோமெட்ரிஸ்ட் 1, சிறப்பு கல்வியாளர் 1, தொழில் சிகிச்சையாளர் 1, டேட்டா மேனேஜர் 1, ஆடியோமெட்ரிஷியன் 1, என மொத்தம் 21 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவை அனைத்தும் தற்காலிக பணியிடம் ஆகும்.
மருத்துவ அதிகாரி பதவிக்கு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மருத்துவ அதிகாரி ( யுனானி) பதவிக்கு யுனானி (BUMS) படிப்பை முடித்திருக்க வேண்டும். பல் மருத்துவம் பிடிஎஸ் முடித்திருக்க வேண்டும். இடைநிலை சுகாதார வழங்குநர் பதவிக்கு நர்சிங்/DGNM முடித்திருக்க வேண்டும். சித்த தெரபிஸ்ட் உதவியாளர் பதவிக்கு நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆடியோலஜிஸ்ட்/ பேச்சு பயிற்சியாளர் பதவிக்கு செவியுணர்வியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ப்ரோகிராம் உடன் நிர்வாகம் பதவிக்கு அதற்கான பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பல் டெக்னீஷியன் பதவிக்கு அதற்கான சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆப்டோமெட்ரிஸ்ட் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிறப்பு கல்வியாளர் பதவிக்கு அதற்கான பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தொழில் சிகிச்சையாளர் பதவிக்கு அதற்கான இளங்கலை/முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டேட்டா மேனேஜர் பதவிக்கு PGDCA/MCA முடித்திருக்க வேண்டும். ஆடியோ மெட்ரிஷியன் பதவிக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.15,000 முதல் அதிகப்படியாக ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். மருத்துவர் பதவிக்கு ரூ.60,000, யுனானி மருத்துவர் பதவிக்கு ரூ.34,000, நர்ஸ் பதவிக்கு ரூ.18,000, பல் மருத்துவர் பதவிக்கு ரூ.34,000 வழங்கப்படும். தெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ரூ.23,000 வழங்கப்படுகிறது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nilgiris.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பி நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட சுகாதார அலுவலர், எண்: 38, ஜெயில் ஹில் ரோடு, உதகமண்டலம் 643 001. விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - Government Hospital Requirements - Official Notification - Pdf
No comments: