முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், உயிரியல், கணினி பயிற்றுநர் என 10 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ளது. இதில், தொகுப்பூதியமாக 18 ஆயிரம் மற்றும் கணினி பயிற்றுநருக்கு 15,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இதற்கு, ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள். இல்லையெனில், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள், அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ, உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் இன்று மாலை 5:00 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments: