7,783 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் - யார் விண்ணப்பிக்கலாம்?கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம்
தமிழ்நாடு சமூக நலத்துறையில் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் இருக்கும் 7,783 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 மினி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். இந்நிலையில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ளலாம்.
பணியின் விவரங்கள்
- அன்கன்வாடி பணியாளர் - 3,886
- மினி அங்கன்வாடி பணியாளர் - 305
- அங்கன்வாடி உதவியாளர்கள் - 3,592
- மொத்தம் - 7,783
அங்கன்வாடி பணியாளர் சம்பள விவரம்
தேர்வு செய்யப்படும் அங்கன்வாடி பணியாளர்கள் முதல் 1 வருடத்திற்கு தொகுப்பூதியமாக பணியமர்த்தப்படுவார்கள். 1 வருடம் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் சிறப்பு நேர சம்பள விகிதத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
- அங்கன்வாடி பணியாளர் ரூ.7,700 நிலை 4- ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை
- மினி அங்கன்வாடி பணியாளர்கள் ரூ.5,700 நிலை 3- ரூ.5,700 முதல் ரூ.18,000
- அங்கன்வாடி உதவியாளர் ரூ.4,100 நிலை 2- ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை
வயது வரம்பு
அங்கன்வாடி பணியாளர் மற்றும் மினி அங்கன்வாடி பணியாளர்கள் பதவிகளுக்கு 25 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம்.
அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு 20 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம்.
இதில் கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 5 வருடங்கள் தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளி பெண்களுக்கு 3 வருடங்கள் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி
அங்கன்வாடி பணியாளர் மற்றும் மினி அங்கன்வாடி பணியாளர்கள் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். அங்கன்வாடி மையங்கள் அமைந்திருக்கும் பகுதியில் இருப்பவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும். ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவை முகவரி சான்றிதழ்களாக எடுத்துகொள்ளப்படும்.
இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியானதும் தகுதியுள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் படி, அவரவர் மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Click Here to Download - G.O 31 - 7783 Anganwadi Post Appointing - Guidelines - Pdf
No comments: