10th - சத்துணவு துறை - 8997 காலியிடங்கள் அறிவிப்பு - முழு விவரம்
தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சத்துணவுத் திட்டத் துறையில் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளா் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளா்களில் 12 மாதங்கள் திருப்திகரமாக பணியை முடிக்கும் நபா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
தொகுப்பூதிய சமையல் உதவியாளா் பணி நியமனத்துக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி என்பது நிா்ணயம் செய்யப்படுகிறது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- காலியிடங்கள் - 8997
- பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
- சம்பளம்: மாதம் Rs.3,000 – 9,000/-
- கல்வி தகுதி: 10ம் வகுப்பு
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பு:
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
Click Here to Download - G.O 95 (16.12.2024) - Filling Up 8,997 Cook Vacancy - Notification - Pdf
8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - அரசாணையில் திருத்தம் செய்து (`ஓராண்டு தொகுப்பூதியத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் & மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு`) புதிய அரசாணை வெளியீடு!
Click Here - M.G.R Mid - Day Meals Scheme - 8997 Vacancy - Official Website
No comments: