ரயில்வேயில் ஆசிரியர் வேலை - 1036 காலிப்பணியிடங்கள் - Last Date to Apply 06.02.2025
- ரயில்வே ஆசிரியர் வேலைவாய்ப்பு
- தேசிய அளவில் 1036 காலிப்பணியிடங்கள்
- இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்
இந்தியன் ரயில்வேயில் இருக்கும் காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், அமைச்சக மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வகைகள் கீழ் ஆசிரியர்கள், சட்ட உதவியாலர், வழக்கறிஞர், மொழிப்பெயர்பாளர், நூலகர், சுகாதார ஆய்வாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சென்னையில் ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வு வாரியத்தின் கீழ் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன.
பதவியின் பெயர் - காலிப்பணியிடங்கள்
- முதுகலை ஆசிரியர் - 187
- அறிவியல் கண்காணிப்பாளர் - 3
- பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் - 338
- தலைமை சட்ட உதவியாளர் - 54
- அரசு வழக்கறிஞர் - 20
- உடற்தகுதி பயிற்சியாளர் - 18
- அறிவியல் உதவியாளர்/ பயிற்சியாளர் - 2
- ஜூனியர் மொழிப்பெயர்பாளர் - 130
- சீனியர் விளம்பர ஆய்வாளர் - 3
- ஊழியர் மற்றும் நலம் ஆய்வாளர் - 59
- நூலகர் - 10
- இசை ஆசிரியர் - 3
- ரயில்வே தொடக்க ஆசிரியர் - 188
- உதவி ஆசிரியர் - 2
- ஆய்வக உதவியாளர் - 7
- ஆய்வக உதவியாளர் கிரேடு - 312
- மொத்தம் - 1036
வயது வரம்பு
- முதுகலை ஆசிரியர்களுக்கு 18 முதல் 48 வயது வரை இருக்கலாம்.
- அறிவியல் கண்காணிப்பாளர் - 18 முதல் 38 வயது வரை இருக்கலாம்.
- பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் - 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
- தலைமை சட்ட உதவியாளர் - 18 முதல் 43 வரை இருக்கலாம்.
- அரசு வழக்கறிஞர் - 18 முதல் 35 வரை இருக்கலாம்.
- உடற்தகுதி பயிற்சியாளர், இசை ஆசிரியர், ரயில்வே தொடக்க ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு 18 முதல் 48 வரை இருக்கலாம்.
- அறியியல் உதவியாளர் - 18 முதல் 38, மொழிப்பெயர்பாளர், விளம்ப சுகாதார ஆய்வாளர், ஊழியர் மற்றும் நல ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு18 முஹ்டல் 36 வரை இருக்கலாம். நூலகர் 18 -33 வயது வரை இருக்கலாம்.
கல்வித் தகுதி
ரயில்வே உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு முதுகலை, பட்டதாரி மற்றும் தொடக்க ஆசிரியர்கள் மற்றும் இதர பிரிவு ஆசிரியர்கள் அந்தந்த பாடங்களிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். இதர பதவிகளுக்கும் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். முழுமையான கல்வித் தகுதியை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
சம்பள விவரம்
இப்பணியிடங்களுக்கு நிலை 2 முதல் 8 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. முதுகலை ஆசிரியர்களுக்கு நிலை -8 கீழ் தொடக்க சம்பளம் ரூ.47,600 ஆகும். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு நிலை - 7 கீழ் தொடக்க சம்பளம் ரூ.44,900 ஆகும். தொடக்க கல்வி ஆசிரியர் பதவிக்கு நிலை - 6 கீழ் தொடக்க சம்பளம் ரூ.35,400 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மொழிப்பெயர்ப்பு தேர்வு/ திறன் தேர்வு/ ஆசிரியர் திறன் தேர்வு ஆகியவை நடத்தப்படுகிறது. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனைக்கு பின்னர் பணி நியமனம் செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவத்தினர்கள் ரூ.250 செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்
- விண்ணப்பம் தொடங்கும் நாள் - 07.01.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் - 06.02.2025
- விண்ணப்பம் திருக்க கால அவகாசம் - 09.02.2025 - 18.02.2025
ரயில்வேயில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் உள்ள அறிவிப்பை படித்து ஆன்லைன் மூலமாக தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
No comments: