12th Pass - TANSACS (TN Aids Control Society) வேலை - Last Date to Apply - 13.02.2025
பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பணியின் பெயர்: ஓட்டுநர் (Driver)
- சம்பளம்: மாதம் Rs.18,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: 12th Std Pass
- வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. பணியின் பெயர்: கிளீனர் (Cleaner)
- சம்பளம்: மாதம் Rs.18,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: 12th Std Pass
- வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://perambalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்:
- பிறப்புச் சான்று
- மதிப்பெண் பட்டியல்கள் (S.S.L.C, +2, Degree)
- மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
- முன் அனுபவ சான்று
- சிறப்பு தகுதிக்கான சான்று (Ex-Service Man)
- ஓட்டுநர் உரிமம் (Heavy License)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்:
மாவட்ட திட்ட மேலாளர் (பொ), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, தரைத்தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் – 621 212.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Click Here For Notification - Pdf
Click Here to Apply - Official Website
No comments: