10th, 12th, Degree, Diploma, ITI படிப்பிற்கு அரசு வேலைவாய்ப்பு
என்ஜினீயர்களுக்கு பணியிடம்
பணி நிறுவனம்: கோல் இந்தியா லிமிடெட் காலி இடங்கள்: 434 பதவி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., எல்.எல்.பி., எம்.பி.ஏ., சி.ஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த முதுகலைப் பட்டபடிப்பு. பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
வயது: 30-9-2024 அன்றைய தேதிப்படி 30 வயது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-2-2025
இணையதள முகவரி: https://www.coalindia.in/career-cil/jobs-coal-india/mt-recruitment-cbt-2025/
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு
பணி நிறுவனம்: பார்டர் ரோடு ஆர்கனைசேஷன் (பி.ஆர்.ஓ.) காலி இடங்கள்: 411 பதவி: பல்துறை திறன் பணியாளர்கள் (எம்.எஸ்.டபிள்யூ - சமையலர், மேசன், பிளாக்ஸ்மித், மெஸ் வெயிட்டர்)
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: 25-2-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, செய்முறை தேர்வு, மருத்துவ பரிசோதனை விண்ணப்பிக்க
கடைசி தேதி: 24-2-2025
இணையதள முகவரி: https://marvels.bro.gov.in/BROMarvels/CafeBRO
பெல் நிறுவனத்தில் வேலை
பணி நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்)
காலி பணி இடங்கள்: 350
பதவி: புரொபஷனரி என்ஜினீயர் (எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்)
பணி இடம்: சென்னை (தமிழ்நாடு), பெங்களூரு (கர்நாடகா), காசியாபாத் (உ.பி.), ஐதராபாத் (தெலுங்கானா), பஞ்ச்குலா (அரியானா), புனே (மராட்டியம்), மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), கோட்வாரா (உத்தரகாண்ட்) மற்றும் நவி மும்பை (மராட்டியம்)
கல்வி தகுதி: பி.இ., பி.டெக்., பி.எஸ்சி என்ஜினீயரிங் வயது: 1-1-2025 அன்றைய தேதிப்படி 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம் (தமிழ்நாடு): சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-1-2025
இணையதள முகவரி: https://bel-india.in/job-notifications/
டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி
பணி நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்)
காலி இடங்கள்: 234
பதவி: ஜூனியர் எக்சிகியூட்டிவ் (மெக்கானிக்கல் என்ஜினீயர், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர், இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயர், கெமிக்கல் என்ஜினீயர்) ஒரு சில பதவிகளுக்கு பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்திருக்கவேண்டும்.
வயது: 18 முதல் 25 வயது வரை. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, குழு விவாதம், திறனறி தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க
கடைசி தேதி: 14-2-2025
இணையதள முகவரி: https://www.hindustanpetroleum.com/job-openings
No comments: