TNPSC Group 4 தேர்வில் வெற்றி பெற Tips
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்த குருப் 4 தேர்வு முடிவுகள் அமைய உள்ளது. பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடுடன் வெளியாக உள்ள இந்த தேர்வு முடிவில் பொது பிரிவிலும் பெண்களுக்கான இடம் கிடைக்கும்.
இதனால் பெண்கள் தேர்வாக அதிக வாய்ப்பு உள்ள நிலையில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தோராயமாக சுமார் 5 மதிப்பெண்கள் வித்தியாசம் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 தேர்வில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், இந்த தேர்வில் பெண்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வு 18 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் எழுதலாம். பொது அறிவு, திறனறித் தேர்வு மற்றும் மாெழிப்பாடத்தில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மூன்று மணிநேரம் தேர்வு நடைபெறும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண். எளிதாக இருக்கும் தேர்வு தான் இது.
படித்து முடித்து ஒரு 3-4 வருடத்திற்குள் தேர்வு எழுதினால் 150 மதிப்பெண் நிச்சயம் எடுக்கலாம். ஏனெனில் நீங்கள் பள்ளியில் படித்தது தான் இதற்கு மொத்த கேள்விகளும் வரும். தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.
No comments: