Degree Qualification - SBI Bank Job - ரூ. 64 ஆயிரம் சம்பளம் - 13,735 காலிப்பணியிடங்கள் - Last Date to Apply 07.01.2025
அரசு வங்கியான எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் (Junior Associate) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
காலி பணியிடங்கள்:
பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் நாடு முழுவதும் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இணைந்து மொத்தம் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன.இப்பணியிடங்களில் எஸ்சி - 63, எஸ்டி - 2, ஒபிசி - 91, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 33, பொதுப்பிரிவினருக்கு - 150 என்ற வகையில் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு :
எஸ்பிஐ வங்கி கிளார்க் பிரிவு பணிக்கு 20 வயதிலிருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.அதாவது, 02.04.1996 தேதியிலிருந்து 01.04.2004 தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் SC, ST பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், OBC பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 13 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree)முடித்திருக்க வேண்டும்.இரண்டு பட்டப்படிப்புகள் (IDD) இணைத்து பட்டப்பெற்றவர்கள் அதாவது, 31.12.2024 தேதி அல்லது அதற்குள் கல்வியை முடித்திருக்க வேண்டும்.இறுதி ஆண்டில் இருக்கும் மாணவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், பட்டப்படிப்பு முடிவு தேதி டிசம்பர் 31 ஆக இருக்க வேண்டியது அவசியம்.
தேர்வு முறை:
தகுதியானவர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். முதல்நிலை தேர்வு ஆன்லைன் வழியாக 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வு ஆன்லைன் வழியில் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தமிழ் தகுதித்தேர்வு நடைபெறும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் மொழியில் படித்தவர்கள் இத்தேர்வு கிடையாது.மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து, சான்றிதழ் சரி பார்ப்பிற்கு பின்பு இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
சம்பளம்:
எஸ்பிஐ கிளார்க் பிரிவில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.24,050 முதல் ரூ.64,480 என்ற விதம் சம்பளம் வழங்கப்படும்.இதில் தொடக்கமே அடிப்படை சம்பளமாக ரூ.26,730 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை:
இதில் விண்ணப்பிக்க https://bank.sbi/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் உள்ள ( Recruitment of Junior Associates 2024) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
இதில் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். SC ,ST, மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விளக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக ஜனவரி 7 ஆம் தேதி 2025 ஆகும். மேலும் முதல்நிலை தேர்வு பிப்ரவரி 2025 இல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: