அரசு மருத்துவமனையில் பல்வேறு வேலை - Degree / Diploma - Last Date to Apply 31.12.2024
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஆடியோமெட்ரிசியன், இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்சியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதவிக்கு மாத ஊதியம் ரூ.17,250, ரூ.17,000 வீதம் வழங்கப்பட வழங்கப்பட உள்ளன.
இந்த பதவிக்கு டிப்ளமோ இன் ஆடியோமெட்ரிசியன் என்னும், BA SLP பேச்சுலர் ஆப் ஆடில்லஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பதோலஜி படித்தவர்கள் இந்த பதவிக்குத் தகுதியானவர்கள் என கருதப்படுகிறது.
மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள சித்தா அரசு மாவட்ட மருத்துவமனையில் நிரல் மேலாளர் பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. இந்த பதவிக்கு மாத ஊதியம் ரூ.30,000 வழங்கப்பட உள்ளது.
இந்த பதவிக்கான கல்வித் தகுதி பொதுச் சுகாதாரத்தில் பணிபுரியும் நிறுவனங்களில் பணி அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்ச இளங்கலைப் பட்டம் (BNYS). சமூகத் துறை திட்டங்கள் / தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசாங்கத்தின் பணிகளின் வெளிப்பாடு மற்றும் MS அலுவலகம், MS Word, MS Power Point, MS Excel உள்ளிட்ட கணினிகள் பற்றிய அறிவும் விரும்பத்தக்கதாக இருக்கும்.
ஆயுஷ் ஸ்ட்ரீமில் முதுகலை தகுதி மற்றும் ஆயுஷ் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் பணிபுரிந்த அனுபவமுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பதவி தற்காலிகமானது மட்டுமே, எந்த சூழ்நிலையிலும் பணிகள் நிரந்தரம் செய்யப்படாது. இந்த வேளைகளில் பணிபுரியப் பணியில் சேர்வதற்கு மேற்கண்ட நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு ஒப்பந்தக் கடிதமும் வழங்க வேண்டும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிர்வாக செயலாளர் மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் (District Health Society), காஞ்சிபுரம் மாவட்டம் - 631 501 என்ற முகவரிக்கு டிசம்பர் 31ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தொலைப்பேசி எண் : 044-27222019 மூலமாகவும் விபரங்களைப் பெறலாம்.
குறிப்பு:
விண்ணப்பப் படிவங்களைக் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேரில் பெற்றுக்கொள்ளவும் பின்னர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து. இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested) சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் கல்வித் தகுதி மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச் சான்றிதழ் நகல், ஆதார் நகல், முன்னனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழும் சேர்த்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
No comments: