பழனி முருகன் கோயிலில் வேலை - தமிழ் தெரிந்தால் போதும் - 296 பணியிடங்கள்
பழனி முருகன் கோயிலில் 296 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கீழ் இயங்கும் இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை புரிகின்றனர். இந்நிலையில், பழனி கோயிலில் உள்ள 296 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது இந்த கோயிலின் உள்துறை, வெளித்துறை, ஆசிரியர்,தொழில்நுட்ப பிரிவு என பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். அது குறித்த விவரங்களை பின்வருமாறு காண்போம்.
வெளித்துறை பணியிடங்கள்:
* இளநிலை உதவியாளர் பணிக்கு 7 காலியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
* சீட்டு விற்பனையாளர் பணிக்கு 10 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
* சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்) பணிக்கு 2 காலியிடங்கள். தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
* சத்திரம் காப்பாளர் பணிக்கு 16 காலியிடங்கள். 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
* துப்புரவு பணியாளர் (உபகோயில் மற்றும் உபநிறுவனங்கள்) பணிக்கு 104 காலியிடங்கள். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்) பணிக்கு 57 காலியிடங்கள். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* மலைக்கோயில், உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்களின் காவல் பணிக்கு 46 காலியிடங்கள் உள்ளன. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
* கால்நடை பராமரிப்பு பணிக்கு 2 பணியிடங்களும், உதவி யானை மாவுத்தர் (உபகோயில்)பணிக்கு 1 காலியிடமும் உள்ளன. இந்த பதவிகளுக்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
No comments: