Bank Job - 170 காலி பணியிடங்கள் - Degree Qualification - ரூ.70,000 சம்பளம் - Last Date to Apply 27.11.2024
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 170 senior customer executive பணியிடங்கள் காலியாக உள்ளது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் (SCSE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் - மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பணியிடங்கள் உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருப்பது முக்கியம்.
விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மாதம் ரூ.32,000 முதல் ரூ.72,061 வழங்கப்படும்.
ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு என இரண்டு கட்ட தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு நாடு முழுவதும் உள்ள சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்ப கட்டணம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 27ம் தேதியாகும். ஆன்லைன் வழியான எழுத்து தேர்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: