Bank Job - 592 காலி பணியிடங்கள் - Degree Qualification - ரூ.40,000 சம்பளம் - Last Date to Apply 19.11.2024
பரோடா வங்கியில் Specialist Officer பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பதவிக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் 19-11-2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்:
Specialist officers
காலியிடங்கள்:
சிறப்பு அதிகாரி பதவியில் ரிலேசன்சிப் மேனேஜர் 140, டிஜிட்டல் குரூப் 139, ரீசிவபிள் மேனேஜ்மென்ட் 202, தகவல் தொழில்நுட்பம் 31, கார்பரேட், இன்ஸ்டிடியூசனல் கிரடிட் 79, நிதி 1 என மொத்தம் 592 இடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
22 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/ OBC / PWD அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு. பணி அனுபவத்திற்கேற்பவும் வயது வரம்பில் சலுகை உண்டு. 01-10-2024 தேதியின்படி வயது கணக்கிடப்படும்.
சம்பள விவரம் :
Specialist Officer பணியிடத்திற்கான மாதச் சம்பளம் ஆனது Rs.40,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பொது / EWS / OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600. SC/ST/ PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
கல்வித்தகுதி:
Computer Science / IT / Electronics / Electrical / Communication போன்ற ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் B.E. / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது MBA Finance / MCA/PGDM Marketing / MBA Marketing அல்லது CA/CMA/CFA போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
பணி அனுபவம் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வில் தகுதியின் அடிபடையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இது பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம்அனுப்புவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.bankofbaroda.in/career.html தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசிநாள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 19-11-2024 தேதியாகும். மேலும் முழு விவரங்களுக்கு Advt. No.: BOB/HRM/REC/ADVT/2024/06 இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
No comments: