8th Pass - தமிழ்நாடு அரசு வேலை - Office Assistant in Pocso Court - சம்பளம்: Rs.24,200 - Last Date to Apply 05.11.2024
குற்றவழக்குத் தொடர்புத் துறையின் கீழ் போக்சோ நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில்
தர்மபுரி மாவட்டம், குற்றவழக்குத் தொடர்வுத் துறையின் கீழ் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கென ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு :
01.07.2024 தேதியின் படி விண்ணப்பதார்கள் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சமாக 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு அதிகபட்சமாக 34 வயது வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினருகு அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணியின் தன்மை :
அரசு விதிகளின் படி, தர்மபுரி குற்ற வழக்குத் தொடர்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவிசெய்தல், அலுவலக நடைமுறைப் பணிகளில் உதவிடுதல்.
ஊதிய விவரம் :
குற்ற வழக்குத் துறையின் கீழ் உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு நிலை-1 படி, ரூ.15,700 முதல் ரூ.58,100 விகிதத்தில் அரசு நிர்ணயம் படிகளுடன் மாத ஊதிய வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
இப்பணியிடத்திற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடத்திற்கு விண்ணப்பதார்களில் எண்ணிக்கையை பொறுத்து எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://dharmapuri.nic.in/ என்ற தர்மபுரி மாவட்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :
உதவி இயக்குநர் அலுவலகம்,
குற்ற வழக்குத் தொடர்புத் துறை,
ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம்,
வெண்ணம்பட்டி ரோடு,
தர்மபுரி மாவட்டம் - 636 705.
விண்ணப்பிக்க கடைசி நாள்
05.11.2024 மாலை 05.45 மணி வரை
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மேல் குறிப்பிட்ட விவரங்கள் படி, விண்ணப்பப் படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
Click Here to Download - Notification
Click Here to Download - Application
No comments: