தமிழ்நாடு அரசு வேலை - நூலகர் - சம்பளம்: Rs.24,200 - Last Date to Apply 08.11.2024
தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker)
சம்பளம்: மாதம் Rs.7,700 – 24,200/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.11.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://dharmapuri.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தருமபுரி மாவட்டம் – 636705.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Click Here to Download - Notification
Click Here to Download - Application
No comments: