8th Pass - நெடுஞ்சாலை துறை – 81 காலியிடங்கள் - சம்பளம் ரூ.15700 - Last Date 26.11.2025
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை (TN Highways Department) பல்வேறு மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் (Office Assistant), ஓட்டுநர் (Driver), அலுவலக காவலர் (Office Watchman), மற்றும் காவலர் (Watchman) ஆகிய பதவிகளுக்கு 81 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை, வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
Total Vacancy (மொத்த காலியிடங்கள்)
அலுவலக உதவியாளர் (Office Assistant) 54
ஓட்டுநர் (Driver) 8
அலுவலக காவலர் (Office Watchman) 18
காவலர் (Watchman) 1
Total (மொத்தம்) 81
கல்வித் தகுதிகள்:
அலுவலக உதவியாளர் (Office Assistant)
அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மிதிவண்டி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் (Driver)
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக காவலர் (Office Watchman)
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் (Watchman)
8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
- அலுவலக உதவியாளர் - 18 to 35 Years
- ஓட்டுநர் - 18 to 37 Years
- அலுவலக காவலர் - 18 to 37 Years
- காவலர் - 18 to 37 Years
சம்பளம் விவரங்கள்:
- அலுவலக உதவியாளர் : Rs.15700 – 58100/- (Level 1)
- ஓட்டுநர் : Rs.19500 – 71900/- (Level 8)
- அலுவலக காவலர் : Rs.15700 – 58100/- (Level 1)
- காவலர் : Rs.15700 – 58100/- (Level 1)
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள், நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்
- TN Highways Thanjavur 17.11.2025
- TN Highways Vellore 17.11.2025
- TN Highways Cuddalore 15.11.2025
- TN Highways Tirupur 19.11.2025
- TN Highways Covai 21.11.2025
- TN Highways Chengalpattu 23.11.2025
- TN Highways Tenkasi 17.11.2025
- TN Highways Covai 26.11.2025
- TN Highways Trichy 20.11.2025
- TN Highways Thoothukudi 17.11.2025
- TN Highways Nagercoil 14.11.2025
விண்ணப்பிப்பது எப்படி:
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்குவிண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தனித்தாளில் தங்கள் பெயர், பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, சாதி, மற்றும் இருப்பிடம் போன்ற சுயவிவரங்களைக் குறிப்பிட்டு இருப்பிடச்சான்றிதழ் மற்றும் 2-அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடமிருந்து நாளது தேதியில் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றுகளுடன் இணைத்து மேற்குறித்த பதவிகளுக்கு தனித்தனியேய பதிவின் பெயரினைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென தனியாக விண்ணப்பங்களோ/ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை. உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
கீழே அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள அந்தெந்த மாவட்ட முகவரிக்கு விண்ணப்பங்களை நேரிலோ (or) தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். காலதாமதமாகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்த விவரங்கள் தனியே கடிதம் மூலமாக (call letter) தெரிவிக்கப்படும்.
பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்திகரமான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

No comments: