SSC - மத்திய அரசு வேலை - 1,340 காலிப்பணியிடங்கள் - Last Date to Apply 21.07.2025
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன.
இதற்கான தோ்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி விவரங்கள், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் பணியமர்த்தல் தொடர்பான அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வலைத்தளமான ssc.gov.in அல்லது ஆண்ட்ராய்டு செல்பேசிகளில் ‘mySSC’ என்ற செயலி மூலம் இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,400 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி : ஜூலை 22
- விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி தேதி : ஆகஸ்ட் 1 மற்றும் 2
- கல்வித்தகுதி : என்ஜீனியரிங் முடித்தவர்கள்
- ஆன்லைன் தேர்வு : அக்டோபா் மாதம்
பணியின் பெயர்: Junior Engineer
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
காலியிடங்கள்: 1340
கல்வி தகுதி: Diploma, B.E/B.Tech
வயது வரம்பு:
32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ ST – 5 years,
- OBC – 3 years,
- PwBD (Gen/ EWS) – 10 years,
- PwBD (SC/ ST) – 15 years,
- PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ PwBD/ ESM & பெண்கள் – கட்டணம் கிடையாது
- Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Examination (CBE) (Paper-I)
- Computer Based Examination (CBE) (Paper-II)
- Document Verification (DV)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Click Here to Download - SSC - 1340 Jobs - Official Notification - Pdf
Click Here to Download - SSC - 1340 Jobs - Apply Online - Official Website
No comments: