10th Pass - மத்திய அரசு வேலை - 1075 பணியிடங்கள் – சம்பளம் ரூ.56,900 - Last Date to Apply 24.07.2025
மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், தற்போது 1075 மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) மற்றும் ஹவால்தார் (Havaldar) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பணிக்குக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.07.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற அனைத்து விவரங்களையும் விரிவாகக் காணலாம்.
பணியாளர் தேர்வாணையம் (SSC) மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) மற்றும் ஹவால்தார் (Havaldar) பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி
MTS (உதவியாளர்)
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Havaldar (உதவியாளர்)
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு
MTS (உதவியாளர்)
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Havaldar (உதவியாளர்)
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
- MTS (உதவியாளர்) ரூ. 18,000/- முதல் ரூ. 56,900/- வரை
- Havaldar (உதவியாளர்) ரூ. 18,000/- முதல் ரூ. 56,900/- வரை
தேர்வு செயல்முறை
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் SSC MTS வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Computer Based Examination (கணினி அடிப்படையிலான தேர்வு)
- Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)
தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.
விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள்/ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 26.06.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2025
- விண்ணப்பம் திருத்தும் கால அளவு: 29.07.2025 முதல் 31.07.2025 வரை (இரண்டு மணி நேரம்)
- தேர்வு தேதி: 20 செப் – 24 அக்டோபர் 2025
எப்படி விண்ணப்பிப்பது:
SSC MTS வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 26.06.2025 முதல் 24.07.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, [https://ssc.gov.in/] என்ற இணையதளத்திற்குச் சென்று, “Apply” பட்டனைக் கிளிக் செய்து, முதலில் Register செய்ய வேண்டும்.
Register செய்த பிறகு, உள்நுழைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் குறித்த மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.
No comments: