Teachers & Wardens Wanted - 21 Posts - TET Pass - Last Date to Apply - 23.05.2025
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி- கள்ளக்குறிச்சி மாவட்டம் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV/NSCB/ உண்டு உறைவிடப்பள்ளி) திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், கல்வராயன்மலை ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் (13KGBV/1-NSCB) பள்ளிகளுக்கு
TET தேர்ச்சி பெற்ற (பெண்) ஆசிரியைகள் தேவை
காலிபணியிடங்கள் தவிர இந்த ஆண்டு ஏற்படக்கூடிய காலி பணியிடங்களுக்கும் அனைத்து வகை பாடங்களுக்கும் விண்ணப்பங்கள் காத்திருப்போர் பட்டியலுக்காக வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: இளங்கலை B.Ed. மற்றும் TET தேர்ச்சி
*ஊதியம்: விடுதிக்காப்பாளர்- 29000, பாட ஆசிரியர்களுக்கு- 24000
TET தேர்ச்சி பெற்ற அனைத்து பாட ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்குழு மூலம் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் பணி நாடுனருக்கு சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களின் வாயிலாக முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
மாவட்ட தேர்வு குழுவின் முடிவே இறுதியானது.
முழு நேரமும் பெண் குழந்தைகளுடன் பள்ளியில் தங்கிப்பணிபுரிய வேண்டும்.
ஆசிரியர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு முற்றிலும் இலவசம். *முழு சுயவிவரம், தகுதி தேர்வு தேர்ச்சி விபரம், பட்டப்படிப்பு சான்றிதழ்களின் நகல்களுடன் நேரிலோ, பதிவு அஞ்சல் தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களுக்கு மட்டும்
பகுதி நேர ஆசிரியர்கள் தேவை- (கணினி - PGDCA, DCA/உடற்கல்வி - B.P.Ed.,C.P.Ed) கணக்காளர்- B.Com. Tally முடித்தவர்கள்
ஊதியம் - பகுதி நேர ஆசிரியர்கள்-7700, கணக்காளர்- 13200
முன் அனுபவம் மிக்க சமையலர்கள் தேவை.
ஊதியம் -
தலைமை சமையலர் - 8800.
உதவி சமையலர் - 6600
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 23.05.2025
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
ஆமினா பெண்கள் நலவாழ்வு மற்றும் கல்வி அறக்கட்டளை 18, திருக்கோவிலூர் மெயின் ரோடு, கிருஷ்ணா ஸ்டீல் முன்புறம், சங்கராபுரம்- 606 401, கள்ளக்குறிச்சி மாவட்டம். தொடர்பு எண்: 9944442637, 9655653101, 7867959159 Email ID: aameenatrust2002@gmail.com
No comments: