SBI வங்கி வேலை - 2600 காலி பணியிடங்கள் - Last Date Apply 29.05.2025
SBI வங்கியில் பட்டதாரிகளுக்கான 2600 அதிகாரி வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் SBI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 2025-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் ஆபிசர் (Circle Based Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள கிளைகளில் 2600 காலியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தின் சென்னை மண்டலத்தில் தனியாக 120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பது கட்டாயம். வயது வரம்பு 21 முதல் 30 வரையிலாக இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டின் அடிப்படையில்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு. விருப்பமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். எழுத்துத் தேர்வில் (Objective) மற்றும் விரிவான (Descriptive) வகை என இரண்டு கட்டங்கள் உள்ளன.
இதில் ஆங்கிலம், கணினி அறிவு, வங்கி மற்றும் பொருளாதார அறிவு போன்ற பிரிவுகளில் 120 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். பின்னர் கட்டுரை மற்றும் கடிதம் எழுதும் தேர்வும் நடத்தப்படும்.தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரையிலான சம்பளம் வழங்கப்படும். பொதுப்பிரிவு, ஓ.பி.சி, மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதுஇந்த பணிக்கு ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் SBI-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/hi/web/careers/current-openings என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 29, 2025 ஆகும்.
Click Here to Apply - SBI Bank - 2600 Officer Job - Direct Link
No comments: