Degree - தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) - 150 Vacancy - Salary 70,000 - Last Date Apply 09.06.2025
மத்திய அரசின் தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) காலியாக உள்ள டெபியூட்டி மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 150 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு வரும் மே 26-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
மத்திய அரசின் தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) பல்வேறு பிரிவுகளில் உள்ள டெபியூட்டி மேனேஜர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிய்ள்ளது. தேசிய அளவில் மொத்தம் 150 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு மே 26-ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தொடங்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள், தகுதி, சம்பளம் ஆகிய விவரங்களை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் - காலிப்பணியிடங்கள்
- டெபியூட்டி மேனேஜர் (Electrical) - 40
- டெபியூட்டி மேனேஜர் (Mechanical) - 70
- டெபியூட்டி மேனேஜர் (C&I) - 40
- மொத்தம் - 150
இதில் பொதுப் பிரிவில் - 68, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 13, ஒபிசி பிரிவினர் - 38, எஸ்சி பிரிவினர் - 20, எஸ்டி பிரிவினர் - 11 என மொத்தம் 150 இடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
NTPC நிறுவன டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபடியாக 40 வயதைக் கடந்திருக்கக்கூடாது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி
எலக்ட்ரிக்கல் பிரிவு டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்து குறைந்தபட்சம் 10 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மெக்கானிக்கல் பிரிவு டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு மெக்கானிக்கல்/ உற்பத்தி ஆகிய பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேஉம் துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
C&I பிரிவு டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு எல்க்ட்ரிக்கல்/ கட்டுபாடு & இன்ஸ்ரூமெண்டேஷன்/ இன்ஸ்ரூமெண்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
NTPC நிறுவன டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் முறை மாறுப்படும். கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://careers.ntpc.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்
- விண்ணப்பம் தொடங்கும் நாள் 26.05.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் 09.06.2025
- எழுத்துத் தேர்வு/ நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்.
தேசிய அனல் மின் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தேவையான ஆவணங்களுடன் மே 26-ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தொடங்கலாம்.
Click Here to Download - NTPC Job Vacancy - Notification - Pdf
No comments: