தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தரும் வெளிநாட்டு வேலை - யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? - முழு விவரம்
தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வேலைவாய்ப்புகளுக்கான திறன் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இவையிலாமல் தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில், ஐக்கிய அரசு அமீரகம் சார்ஜாவில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகிறது.
வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு அருமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஐக்கிய அரசு அமீரகம் சார்ஜாவில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இன்ஜினியரிங் மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வேலைவாய்ப்புகளுக்கான திறன் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. இவையிலாமல் தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. தமிழ்நாடு அரசின் இந்த நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு முறையாக ஏற்படுத்தி தரப்படுகிறது. மேலும், விசா உள்ளிட்ட தகவல்களும் இந்த நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது.
ஐக்கிய அரசு அமீரகத்தில் வேலை
ஐக்கிய அரசு அமீரகம் சார்ஜாவில் உள்ள Steel Structural Fabricators, CNC Laser cutting machine programmer cum operator, Fork Lift cum JVC Operator, Heavy Bus Driver. Press Toll & Sheet Metal Die maker, CNC Plasma Cutting Machine Programmer cum Operator, Marketing Engineer, Production Engineer, QA/QC Document controller, Industrial Power Electrician, Instrument Technicians (Automation). Diesel Engines, Workshop Machinery Maintenance, Split AC / Window AC/Central AC Technician/Store keeper ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பதவிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு ஊதியம் வழங்கப்படும்?
- Steel Structural Fabricators பணிக்கு ரூ 55, 200
- CNC Laser cutting Machine Programmer cum Operator ரூ. 51,750
- Fork Lift Cum JVC Operator ரூ. 41,000
- Heavy Bus Driver ரூ. 60,000
- Press Toll & Sheet Metal Die maker ரூ. 41,400
- CNC Plasma Cutting Machine Programmer cum Operator ரூ.55,200
- Marketing Engineer ரூ.64,400-69,000
- Production Engineer ரூ.64,000.
- QA/QC Document controller ரூ.63,250
- Industrial Power Electrician ரூ.42.550
- Instrument Technicians (Automation) ரூ.52,900
- Diesel Engines and Workshop Machinery Maintenance ரூ. 37,950
- Workshop Maintenance Mechanic ரூ.40,000
- Split AC & Window AC + Central AC Technician/ Store keeper ரூ.34500
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வெளிநாட்டு பணிக்கு விண்ணப்பிக்க் மெக்கானிக்கல் பொறியியலில் டிப்ளமோ மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவத்துடன் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசு நிறுவனத்திற்கு சேவை கட்டணம்
இப்பணியிடங்களுக்கு உணவு மற்றும் இருப்பிடம் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இப்பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதுமானது.
சென்னையில் நேர்காணல்
இப்பணிகளுக்கான நேர்காணல் 03.05.2025 & 04.05.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ளவர்கள் (Resume, Passport Original & Copy) & Photo ஆகியவற்றுடன் நேரில் சென்னையில் நடைபெறும் நேர்காண்லில் கலந்துகொள்ள வேண்டும்.
முகவரி
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,
எண்: 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 32.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இணையதளம் https://omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 044-22502267 என்ற எண்ணிலும், 9566239685 என்ற வாட்ஸ்அப் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம்.
No comments: