10th Pass - இந்து சமய அறநிலைத்துறை - 109 காலியிடங்கள் - சம்பளம்: Rs.18,500 முதல் - Last Date to Apply - 28.02.2025
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பதவியின் பெயர்: தட்டச்சர்
- சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
2. அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
3. கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானிய இயக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பதவியின் பெயர்: காவலர்
- சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 70
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
3. பதவியின் பெயர்: கூர்க்கா
- சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
4. பதவியின் பெயர்: ஏவலாள் (பண்ணை சாகுபடி)
- சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
5. பதவியின் பெயர்: உப கோயில் பெருக்குபவர்
- சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
6. பதவியின் பெயர்: கால்நடை பராமரிப்பாளர்
- சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
7. பதவியின் பெயர்: உபக்கோயில் காவலர்
- சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
8. பதவியின் பெயர்: திருமஞ்சனம்
- சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 03
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
9. பதவியின் பெயர்: முறை ஸ்தானீகம்
- சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
10. பதவியின் பெயர்: ஒடல்
- சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இதுதொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
11. பதவியின் பெயர்: தாளம்
- சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இதுதொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
12. பதவியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர்
- சம்பளம்: மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
மின்னணு மற்றும் தொலை தொடர்பு பொறியியலில் பட்டைய படிப்பு
13. பதவியின் பெயர்: பிளம்பர்
- சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:
1. அரசால்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் (ITI) குழாய் தொழில் / குழாய் பணியர் (Plumber Trade) பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. தொடர்புடைய பிரிவில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் அல்லது இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் (Apprenticeship) அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
14. பதவியின் பெயர்: உதவி மின் பணியாளர்
- சம்பளம்: மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1. அரசால்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் (ITI) வழங்கப்பட்ட மின் (Electrical) / மின் கம்பி பணியாளர் (Wireman Trade) பாடப்பிரிவில் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. மின் உரிமம் வழங்கல் வாரிய திறமிருந்து ‘H’ சான்றிதழ் பெற்றடுத்தல் வேண்டும்
15. பதவியின் பெயர்: தலைமை ஆசிரியர்
- சம்பளம்: மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. தமிழில் முதுகலை பட்டமும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒரு இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும் (B.T., or B.Ed.,).
2. ஏதேனும் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து இருக்க வேண்டும்
16. பதவியின் பெயர்: தேவார ஆசிரியர்
- சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
2. யாதொரு ஆகம பள்ளி (அல்லது) தேவார பாடசாலைகள் (அல்லது) வேத பாடசாலைகளில் 3 ஆண்டுகள் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
17. பதவியின் பெயர்: சங்கீத இசை ஆசிரியர்
- சம்பளம்: மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. குரல் இசையில் மூன்று வருட பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் (அல்லது) இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
2. இசை ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி
18. பதவியின் பெயர்: ஆகம ஆசிரியர்
- சம்பளம்: மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரை
- காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் (சைவம்) ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
இந்து சமய மற்றும் அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் ஐந்தாண்டு கால அளவிற்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்து இருக்க வேண்டும்.
2. சைவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத, ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டுகள் பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025 மாலை 5.45 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ மற்றும் https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உரையில் “பணியிட வரிசை ……………….. மற்றும் …………………. பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை – 606 601.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Click Here For Notification - Pdf
Click Here to Apply Online - Official Website
No comments: