இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு - 20 காலியிடங்கள்
இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள நகைகள் மற்றும் விலையுயர்ந்தவற்றை சரிபார்க்கவும், மதிப்பிடவும் செயல்பட்டு வரும் நகை மதிப்பீட்டு குழுவில் பணிபுரிந்திட தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்காக மொத்தம் 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 17.11.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இனையதளத்தை அணுகவும்.
அறிவிப்பு விவரம்:
நிறுவனம் - இந்து சமய அறநிலையத்துறை
விளம்பர எண் - 44547/2021/பி,2
பணிகள் - இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்
பணியிடம் - சென்னை
காலியிடம் - 20
சம்பளம் - Rs.35,400/- To Rs.1,12,400/- (Pay Level- 11)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி -05.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.11.2021
அதிகாரபூர்வ இணையத்தளம் - hrce.tn.gov.in
கல்வி தகுதி:
இந்த வேலைவாய்ப்பிற்கு சம்மந்தப்பட்ட துறையில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும் இந்து சமய அறநிலையத்துறை தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி அறிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
விண்ணப்பமுறை:
அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, எண் 119, உத்தமர் காந்தி சாலை , நுங்கம்பாக்கம், சென்னை 600034
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செய்தித்தாள் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்த்த பின்னர் விண்ணப்பிக்கவும்.
No comments: