தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்

Recent Posts

Subscribe

பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Saturday, 27 January 2018

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள கிளார்க் தரத்திலான 8 ஆயிரத்து 301 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கு பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதில் 7 ஆயிரத்து 200 இடங்கள் புதிய பணியிடங்களாகும். 1101 பணியிடங்கள் பின்னடைவுப் பணிகளாகும். இதில் தமிழகத்திற்கு 346 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னடைவுப் பணியிடங்களில் தமிழகத்திற்கு 52 இடங்கள் இருக்கின்றன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 885 இடங்களும், மகாராஷ்டிராவில் 730 இடங்களும், ஒடிசா, குஜராத், மேற்குவங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


பணி: Junior Associates (Customer Support & Sales)


வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2018-ஆம் தேதியின்படி 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.01.1990 மற்றும் 01.01.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.


தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் பிராந்திய மொழியில் வாய்மொழித்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளாக நடைபெறும்.


கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.


விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2018


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/careers/ongoingrecruitment.html அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/files/1516358303086_SBI_CLERICAL_ADV_ENGLISH.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment