தலைமை ஆசிரியர் தேவை - நிரந்தர பணியிடம்
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் (Headmaster) பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியும், அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் தலைமை ஆசிரியர் பதவிக்குத் தேவையான கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET – Paper I) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமாகும். இதனுடன் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக (Secondary Grade Teacher) பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி
இடைநிலை ஆசிரியர் பணியுடன் சேர்த்து, பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher - GT) ஆகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள்.
யார் விண்ணப்பிக்கலாம்?
அறிவிப்பின்படி, பின்வரும் தகுதிகளைப் பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்:
- தலைமை ஆசிரியர் பதவிக்கான தகுதியுடன் D.T.Ed. மற்றும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- TET Paper-I தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியர் பணியனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- இடைநிலை ஆசிரியர் (Secondary Grade Teacher - SGT) பதவியில் தற்போது பணியாற்றி வர வேண்டும்.
- அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 06.07.2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள ஆசிரியர்கள் கடைசி நாளுக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தலைமையாசிரியர் பதவிக்கு விருப்பமுள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது கல்வித் தகுதி, TET தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் ஆகியவை முழுமையாக இருப்பதை உறுதி செய்து, காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்குமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொறுப்பு துறப்பு
நாளிதழ் / இணையதள விளம்பரம் ,
யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
பள்ளியை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

No comments: