BT Teachers Wanted - TET Pass - 2 நிரந்தர பணியிடங்கள் - Last Date to Apply 07.08.2026
அரசு உதவிபெறும் பள்ளியில் நிரந்தர பட்டதாரி ஆசிரியர்
தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகாவில் அமைந்துள்ள இராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரலாறு மற்றும் தமிழ் பாடங்களுக்கு தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலியிட விவரங்கள் மற்றும் தகுதிகள்
பணியிடத்தின் தன்மை: நிரந்தரப் பணியிடம்
மொத்த காலியிடங்கள்: 2
1. பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) - 1 பணியிடம்
கல்வித்தகுதி: பி.ஏ. (வரலாறு) மற்றும் பி.எட். தேர்ச்சியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (தாள் II) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இனச்சுழற்சி (இடஒதுக்கீடு): வரிசை எண் 4, பொதுப்பிரிவு (BC).
2. பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) - 1 பணியிடம்
கல்வித்தகுதி: பி.ஏ. (தமிழ்) மற்றும் பி.எட். தேர்ச்சியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (தாள் II) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இனச்சுழற்சி (இடஒதுக்கீடு): வரிசை எண் 7, பொதுப்பிரிவு (MBC).
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 07.08.2026
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலர்,
நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி,
இராமநாதபுரம் - 627760.
சிவகிரி தாலுகா, தென்காசி மாவட்டம்.
கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு எண்கள்: 98658 53575, 94425 08905.
குறிப்பு: அறிவிப்பு வெளியான தேதி 23.07.2026 (ந.க.எண்.1514/S1/26). தகுதியானவர்கள் காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments: