TNPSC-யில் 839 அரசு பணியிடங்கள் - விண்ணப்பம் தொடக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 839 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-5A ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆண்டு அட்டவணையில் தெரிவித்திருந்தபடி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் சாலை ஆய்வாளர் உள்ளிட்ட 56 பதவிகளுக் கான 839 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது.விருப்பம் உள்ள தேர்வர் கள் வருகிற 17-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை யு.பி.ஐ. மூலமாகவும் செலுத்தலாம். ஓ.எம்.ஆர்., கணினி வழித்தேர்வு நடை பெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பில் பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், சாலை ஆய்வாளர், சுரங்க முதலாளி, மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2, மீன்வள சார் ஆய்வாளர், உதவி மேலாளர், விடுதி கண்காணிப்பாளர், சிறப்பு பணிப்பார்வையாளர், இளநிலை பயிற்சி அலுவலர் – மின்பணியாளர் மற்றும் மெக்கானிக் மின்சார வாகனம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இந்தப் பதவிகளுக்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் பணியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். பொதுவாக ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். வயது வரம்பைப் பொறுத்தவரை, 2026 ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். இருப்பினும், இளநிலை பயிற்சி அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-2 போன்ற சில பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனவாரியான வயது தளர்வுகளும் அரசின் விதிகளின்படி வழங்கப்படும்.
தேர்வர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 என இரண்டு கட்டங்களாக நடைபெறும். தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஒருமுறை பதிவு செய்தவர்கள் அதை மீண்டும் செலுத்தத் தேவையில்லை. மேலும், இம்முறை யுபிஐ உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் முறைகளில் தேர்வுக் கட்டணத்தை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பத் திருத்த வசதி ஆகஸ்ட் 19 முதல் 21 வரை வழங்கப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அது ஓஎம்ஆர் அல்லது கணினி வழித் தேர்வு முறையில் நடத்தப்படலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கான முழுமையான அறிவிப்பு, பதவிவாரியான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 21, 2026 வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி முடிந்த பிறகு, சிறு பிழைகளைச் சரிசெய்ய இந்தச் சாளரம் உதவும். விண்ணப்பதாரர்களின் தகுதிகள் அனைத்தும் 2026, ஜூலை 1-ஆம் தேதியைக் கணக்கிட்டே முடிவு செய்யப்படும். கடைசி நேர தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்க, முன்கூட்டியே விண்ணப்பப் பணிகளை முடிப்பது உங்களது வாய்ப்பை உறுதிப்படுத்தும்.
Read more at: https://tamil.careerindia.com/news/tnpsc-cts-2026-recruitment-839-vacancies-diploma-iti-apply-online-011-10299.html
மேற்கண்ட தகவல் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments: