மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - அரசு நிதியுதவி பள்ளி
தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு
இந்து மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் இந்து மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி
எம்.ஏ. அல்லது எம்.காம். அல்லது எம்.எஸ்்சி. பட்டத்துடன் பி.எட். அல்லது எம்.எட். கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவத் தகுதி
குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் மேல்நிலை வகுப்புகளில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரரின் வயது ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும்.
பணியின் தன்மை
பொது பிரிவு (G.T.) அடிப்படையில் தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
ஊதிய விவரம்
அரசு நிதியுதவி பெறும் பள்ளி விதிகளின்படி நடைமுறையில் உள்ள ஊதியமும், இதர அரசு சலுகைகளும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரம், கல்வி மற்றும் பணிச்சான்றிதழ்களின் நகல்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்து, பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
பள்ளி முகவரி
செயலர்
இந்து மேல்நிலைப்பள்ளி
வாணியம்பாடி – 635751
திருப்பத்தூர் மாவட்டம்.
%20copy.jpg)
No comments: