Teachers Wanted - TN HRCE - 3 Posts - சம்பளம் ரூ.25 ஆயிரம் - Last Date to Apply 30.09.2025
இந்து சமயம் அறநிலையத்துறை முக்கிய பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் கீழ் செயல்படும் பயிறிசிப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிப்பதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னை வடபழநியின் அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு கோயில் நிர்வாகத்தின் கீழ் புதியதாக ஒதுவார் பயிற்சி பள்ளி தொடங்கப்பட உள்ளது. இப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றை ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு முற்றிலும் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஓதுவார் பள்ளிகளில் முழு நேர மற்றும் பகுதி நேர வகுப்புகள் நடத்தப்படுகிறது. முழு நேர வகுப்பு என்றால் 3 ஆண்டுகளும், பகுதி நேரம் என்றால் 4 ஆண்டுகளும் என நடைபெறுகிறது. இந்து மதத்தை சேர்ந்த மாணவர்கள் இப்படிப்பை பயின்று வருகிறார்கள்.
அரசு கீழ் ஒதுவார் பணியிடங்களுக்கு இப்பள்ளியில் படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், ஓதுவார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகையும், உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதி ஆகியவை வழங்கப்படுகிறது. பகுதி நேரத்தில் படிப்பவர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படுகிறது.
பணியின் விவரங்கள்
இந்நிலையில், வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி புதிதாக தொடங்கப்படுகிறது. இங்கு பணிபுரிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேவார ஆசிரியர், இசை ஆசிரியர், தமிழ் ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
- தேவார ஆசிரியர் - 1
- இசை ஆசிரியர் - 1
- தமிழ் ஆசிரியர் - 1
மொத்தம் - 3
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தேவார ஆசிரியர் பதவிக்கு கல்வித்தகுதியாக சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது இதர நிறுவனங்கள் நடத்தும் 3 ஆண்டு “பன்னிரு திருமுறை” பாடப்பிர்வை முடித்ததற்கான தேவாரப் பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
இசை ஆசிரியர் பதவிக்கு குரலிசையில் 3 வருடம் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தமிழ் ஆசிரியர் பதவிக்கு தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதார்களின் வயது ஜூலை 1-ம் தேதியின்படி, 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
தேவார ஆசிரியர், இசை ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் ஆகிய மூன்று பதவிகளுக்கும் மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் ஓதுவார் பயிற்சி பள்ளிக்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது https://vadapalaniandavar.hrce.tn.gov.in/ என்ற கோயில் நிர்வாகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தகுதி ஆவணங்களுடன் சான்றிதழ்களை இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ திருக்கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பிற்கு இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பத்தை நிரப்ப தேவையான விவரங்கள்
விண்ணப்பத்தில் விண்ணப்பதார்களின் பெயர், தந்தை/ கணவர் அல்லது பாதுகாவலர் பெயர், பிறந்த தேதி மற்றும் வயது, பாலினம், முகவரி, ஆதார் எண், கைப்பேசி எண், மின்னஞ்சல், மதம், வயது, கல்வித்தகுதி, அனுபவம் ஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும். மேலும் பணிக்கான உறுதிமொழி படிவத்தை நிரப்பி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- பிறந்த தேதியை உறுதி செய்ய 10 அல்லது 12-ம் வகுப்பு பள்ளி மதிப்பெண் சான்றிதழ்
- ஆதார் அட்டை
- வகுப்பு பிரிவு சான்றிதழ்
- கல்வித்தகுதிக்கான சான்றிதழ்
- அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடமிருந்து ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பின்னர் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று
- இறுதியாகப் பயின்ற பள்ளி/ கல்லூரிக்யில் பெறபப்ட்ட நன்னடத்தைச் சான்று
- அனுபவம் சான்று
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை ஆணையர்/ செயல் அலுவலர்
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்,
வடபழநி, சென்னை - 600 026.
முக்கிய நாட்கள்
- விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2025 மாலை 05.45 மணி வரை
- நேர்முகத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்
Important Links
TN HRCE Recruitment - Notification | |
TN HRCE Recruitment - Application | |
TN HRCE Recruitment - Official Website |
No comments: