10th Pass - தமிழக அரசு வேலை - 2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் - முழு விவரம் - Last Date to Apply 05.08.2025
தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் வட்டார வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூலை 6-ம் தேதி வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கிவிட்டது. மாவட்ட வாரியாக இப்பதவிக்கான காலிப்பணியிடங்கள் விவரங்கள் அந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
தகுதிகள்
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில் (SSLC - Secondary School Leaving Certificate Exam) தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதி இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தாலும், தோல்வி அடைந்திருந்தாலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.
யாருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்?
- கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதே வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதார்கள் சம்மந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
- காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதார்களுக்கு அப்பகுதி பணியிடத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- விண்ணப்பதார்களுக்கு மிதிவண்டி அல்லது இரு சக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருப்பது சிறந்ததாகும்.
வயது
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 21 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும், அதிகபட்சமாக 32 வயது வரை இருக்கலாம். பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்/ பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் ஆகிய பிரிவை சேர்ந்தவர்கள் 37 வயது வரை இருக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள் அதிகபட்ச வயது வரம்பு 10 ஆண்டுகள் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, முன்னாள் ராணுவத்தினர் 48 வயது வரை இருக்கலாம். இதில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மர்பினர்/ பட்டியலினத்தவர்/ பழங்குடியினர் ஆகிய பிரிவை சேர்ந்தவர்கள் 53 வயது வரை இருக்கலாம்.
கிராம உதவியாளர் பணிக்கு சம்பளம்
கிராம உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக நிலை 6 கீழ் ரூ.11,000 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை நேரடியாக பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள், விவரங்கள்
- கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அவர்களின் புகைப்படத்தை தயாராக வைத்துகொள்ள வேண்டும்.
- வகுப்பு பிரிவு சான்றிதழ் (சாதி சான்றிதழ்)
- மாற்றுத்திறனாளிகள் என்றால் அதற்கான சான்றிதழ்
- ஆதரவற்ற விதவை என்றால் அதற்கான சான்றிதழ்
- பிறப்பிட சான்றிதழ்
- 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- ஓட்டுநர் உரிமம்
- விண்ணப்பதார்களின் கைபேசி எண் மற்றும் இமெயில் முகவரி தேவை
எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ் வாசிப்பு மற்றும் எழுதுதல் ஆகிய திறனறிவு தேர்வு நடத்தப்படும். அதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். கல்வித்தகுதி, தமிழ் தகுதி, இருப்பிடம், வாகனம் ஓட்டுதல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான தேதி மாவட்ட வாரியாக மாறுப்படுகிறது. இருப்பினும் ஆகஸ்ட் முதல் வாரம் விண்ணப்பங்கள் பெறப்படுவது நிறைவடைகிறது. தேர்வுகள் நடத்தப்பட்டு செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
- பதவி - கிராம உதவியாளர்
- காலியிடங்கள் - 2299
- சம்பளம் - Rs.11,100 – 35,100/-
- கல்வி தகுதி - 10ம் வகுப்பு
- வயது வரம்பு -18 வயது முதல் 37 வயது வரை
- விண்ணப்ப கட்டணம் - கட்டணம் கிடையாது
- தேர்வு செய்யும் முறை - திறனறிதல் தேர்வு, நேர்முக தேர்வு
- பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்
- ஆரம்ப தேதி - 07.07.2025
- கடைசி தேதி - 05.08.2025
- எழுதுதல் திறனறித் தேர்வு தேதி - 05.09.2025
- நேர்முகத் தேர்வு தேதி - 20.09.2025 to 26.09.2025
No comments: