அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை ஆகியவற்றில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தற்காலிக அடிப்படியில் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும். உரிய கல்வித் தகுதி சான்றுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் ஜூன் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து வேலைவாய்ப்பினைப் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் கலோன் தெரிவித்துள்ளார்.
No comments: