நகராட்சி / மாநகராட்சி ஆணையர்கள் மூலம் அரசுப் பணி - நேரடி நியமனம் - பணியிடங்கள் விவரம் - இயக்குநரின் கடிதம்
நகராட்சி / மாநகராட்சி ஆணையர்கள் மூலம் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் விவரம் - நகராட்சி நிர்வாக இயக்குநரின் கடிதம், நாள் : 28-03-2025
அனுப்புநர்
திரு.சு.சிவராசு,இஆப.
நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
சென்னை-28.
பெறுநர்
அனைத்து மாநகராட்சி ஆணையர்கள்,
அனைத்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள்,
அனைத்து நகராட்சி ஆணையர்கள்.
பொருள் : பணியமைப்பு - அரசாணை எண்.152 மற்றும் அரசாணை எண்.10-ன் படி பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - காலிப்பணியிட விவரங்கள் கோருவதுதொடர்பாக,
பார்வை :
1) அரசாணை (நிலை) எண்:152 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, நாள் 20.10.2022
2) அரசாணை எண்:10 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (நப:1) துறை, நாள் 23.01.2023
அரசாணை (நிலை) எண்.152 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை, நாள் 20.10.2022 மற்றும் அரசாணை எண்:10 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (நப1) துறை, நாள் 23.01.2023 ஆகியவற்றின்படி முறையே மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பணியிடங்கள் தோற்றுவித்தும் ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தியும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
மேற்கண்ட அரசாணையின்படி, தோற்றுவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் மாநகராட்சி / நகராட்சி ஆணையாளர்கள் மூலமாக நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்கள் விவரம் பின்வருமாறு.
மாநகராட்சி பணியிடங்கள்
1) நேர்முக எழுத்தர் (Personal Clerk) நகராட்சி பணியிடங்கள்
நகராட்சி பணியிடங்கள்
1) இளநிலை உதவியாளர் (Junior Assistant)
2) வருவாய் உதவியாளர் (Revenue Assistant)
3) தட்டச்சர் (Typist)
4) சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
5) துப்புரவு பணி மேற்பார்வையாளர் (Sanitary Supervisor)
6) களப்பணி உதவியாளர் (Field Assistant)
7) குழாய் பொருத்தனர் நிலை II
8) மின் பணியாளர் நிலை II
No comments: