10th Pass - அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3274 ஓட்டுநர் - நடத்துநர் வேலை வாய்ப்பு - Last Date to Apply 21.04.2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் TNSTC 3274 ஓட்டுநர் - நடத்துநர் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-04-2025
TNSTC Arasu bus job notification
3274 Driver cum Conductor Job Opportunities in the TamilNadu State Transport Corporation
அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர் - கண்டக்டர் வேலை வாய்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் Cum நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
மாநகர போக்குவரத்துக் கழகத்தில்(எம்டிசி) 364 காலியிடங்கள், விரைவு போக்குவரத்துக் கழகத்தில்(எஸ்இடிசி) 318 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை(மார்ச் 21) பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளோர் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு, டிரைவிங் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் https://www.arasubus.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக விண்ணப்பதாரர்கள் ரூ. 1180 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 590 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவம்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கக் கட்டாயம் 18 மாதங்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் 24 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
21-03-2025 தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு.
No comments: