மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பல்வேறு வேலை - உடனே விண்ணப்பிக்கவும்!
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை அமைப்புகளில் முதன்மையான தேசிய பொதுத் தேர்வு வாரியங்களில் ஒன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ).இந்த கல்வி வாரியம் தன்னுடன் இணைந்த பள்ளிகள் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட பிற செல்பாடுகளுக்கு இடைநிலை மற்றும் மூத்த இடைநிலை அளவில் பொதுத் தேர்வை நடத்துவதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது.
இந்த கல்வி வாரியத்தில் காலியாக உள்ள 142 கண்காணிப்பாளர், 70 இளநிலை உதவியாளர் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நேரடி ஆள்சேர்ப்பு அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் https://cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் கணினி பயன்பாடுகளான விண்டோஸ், எம்எஸ்-ஆபிஸ் மற்றும் தரவு தளங்கள், இணையதளங்களை கையாள தெரிந்திருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 18 வயது பூர்த்தியடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் நிமித்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தி தட்டச்சில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், துறை சார்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு மற்றும் திறன் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Click Here to Download - CBSE Employment - Detailed_Notification - Pdf
No comments: