ரயில்வேத்துறை வேலைவாய்ப்பு - 8,113 காலியிடம் - சம்பளம் Rs.75,000 - Last to Apply 13.10.2024
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,113 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அரசுப் பணிக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் தகுதியான பட்டதாரிகள் வரும் அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 8,113
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Chief Commercial cum Ticket Supervisor
காலியிடங்கள்: 1,736
பணி: Station Master
காலியிடங்கள்: 994
வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400
பணி: Goods Train Manager
காலியிடங்கள்: 3,144
வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,200
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Account Assistant cum Typist
காலியிடங்கள்: 1,507
வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,200
பணி: Senior Clerk cum Typist
காலியிடங்கள்: 732
வயதுவரம்பு: 1.1.2025 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,200
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், தட்டச்சு திறன், கணினியில் புணிப்புரியும் திறன், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் அமைந்திருக்கும்.
எழுத்துத் தேர்வு தேதி, இடம் குறித்த தகவல்கள் இ-அட்மிட் கார்டு மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயதுவரம்பில் சலுகை மற்றும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.500, இதர அனைத்து பிரிவினருக்கும் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.10.2024
Click Here to Download - ரயில்வேத்துறை வேலைவாய்ப்பு - 8,113 காலியிடம் - Official Notification - Pdf
No comments: