அரசு வேலை - 8ம் வகுப்பு - பணியிடங்கள் 05 - ரூ.15,700/- ஊதியம்
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (TNSIC) ஏற்பட்டுள்ள Office Assistant பணிக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 8 ஆம் வகுப்பு முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது. சம்பளம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியிடங்கள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (TNSIC) காலியாக உள்ள Office Assistant பணிக்கு என 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- நிறுவனம் – தமிழ்நாடு தகவல் ஆணையம் (TNSIC)
- பணியின் பெயர் – Office Assistant
- பணியிடங்கள் – 05
- விண்ணப்பிக்கும் முறை – Offline
Office Assistant வயது வரம்பு:
01.07.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 32 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
மேலும் MBC / DNC / BC பிரிவினருக்கு 02 ஆண்டுகள் எனவும் SC பிரிவினருக்கு 05 ஆண்டுகள் எனவும் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
TNSIC ஊதிய விவரம்:
Level – 1 என்ற ஊதிய அளவின் படி, Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
Office Assistant கல்வி விவரம்:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Click Here to - Apply Online
No comments: