"இந்து அறநிலைத் துறையில் அதிகாரி வேலை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
இந்து அறநிலைத் துறையில் குரூப் VII-A பிரிவில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கு வரும் ஜனவரி 20 மற்றும் 21-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.
Executive Officer, கிரேடு-I காலியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எழுத முடியும். இந்த பணியிடங்களுக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100 ஊதியமாக வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in) சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிச. 13-ஆம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலமாக கட்டணம் செலுத்த டிச. 15-ஆம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 20 மற்றும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 30 வயதை பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பதிவு மற்றும் தேர்வுக் கட்டணங்கள்: அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் கடந்த மார்ச்சில் ரூ.50-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாகப் பதிவு செய்வோர் மட்டுமே ரூ.150 செலுத்த வேண்டும்.
ஏற்கெனவே நிரந்தரப் பதிவுகளை வைத்திருப்போர் புதிதாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதர பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். அனைத்துப் பணியிடங்களுக்கும் அடிப்படைக் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும்.
தகுதி: கலை, அறிவியல் அல்லது வணிகவியல், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு 3 தாள்களைக் கொண்டது. முதல் தாள் மட்டும் 200 மதிப்பெண்கள் கொண்டதால் முதல் தாள் தேர்வு மட்டும் 2 மணி நேரம் நடைபெறும். மற்ற 2 தாளும் 300 மதிப்பெண்கள் கொண்டது. இந்தற்கான தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும். அதிகபட்ச மதிப்பெண்கள் 900.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in
No comments: