BSNL நிறுவனத்தில் 996 JAO வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி (Junior Accounts officer) பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 996
பணி: Junior Accounts officer
தகுதி: 01.01.2017 தேதியின்படி M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/advertisement/NOTIFICATION_DRJAO_2017.pdf என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments: