யூனியன் வங்கியில் அதிகாரி வேலை: பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!
யூனியன் வங்கியில் காலியாக உள்ள 200 Credit Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 200
பணி: Credit Officer
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 23 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.11.2017
தேர்வு மையம்: பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, லக்னோ, மும்பை
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.unionbankofindia.co.in/pdf/UBRP-2017-18RECRUITMENT-NOTIFICATION-CREDIT.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments: