வேலைவாய்ப்பு : ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட்டில் பணி!
விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் என்ற இரும்பு ஆலையில் மனிதவளத் துறை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் காலியாக உள்ள மேலாண்மைப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: மேலாண்மைப் பயிற்சியாளர்
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500/-. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-.
கடைசி தேதி: 16/7/18
மேலும் விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்
No comments: