48,966 மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இந்திய ரயில்வே, மெட்ரோ ரயில், மருத்துவமனைகள், முப்படைகள், விமானத்துறை என முக்கியமான மத்திய அரசு துறைகளில் காலியாக பல ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு துறைகள் வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு துறைவாரியாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் தொகுத்து இந்த பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி. விண்ணப்பித்து பயன்பெறவும். மாநில அரசு பணிக்களுக்காக காத்திருக்கும் இளைஞர்கள், தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வரும் மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து முழுமையான ஈடுபாடுகளுடன் முயற்சி செய்தால் வெற்றி நமதே.
முயற்சிப்போம்... வெற்றிபெறுவோம்...
வாழ்த்துக்கள்...
பாரத ஸ்டேட் வங்கியில் 407 சிறப்பு அதிகாரி வேலை
அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1517232216518_SBI_SCO_ENG.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை
வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் பல்வேறு கிளைகளில் காலியாக உள்ள 27 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு அறிவிப்வை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 19க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTE30012018C4BD15E84BF7477D927549B329231E9B.PDF என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் வேலை
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள கிளார்க் தரத்திலான 8 ஆயிரத்து 301 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடமிருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/careers/ongoingrecruitment.html அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/files/1516358303086_SBI_CLERICAL_ADV_ENGLISH.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இந்திய ரயில்வேயில் 26,502 லோகோ பைலட், டெக்னீசியன் வேலை
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டிற்கான 26 ஆயிரத்து 505 உதவி லோகோ பைலட், டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் மார்ச் 5-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் வயதுவரம்பு சலுகை, தகுதிகள், தேர்வு திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/cen-012018/detailed-cen-012018.pdf அதிகாரப்பூர்வ லிங்கில் கிளிகில் சென்று தெரிந்து கொள்ளவும்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 1896 வேலை
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 1896 எக்சிகியூட்டிவ் மற்றும் நான் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்.26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முமுழுமையான விவரங்கள் அறிய www.delhimetrorail.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் 60 கான்ஸ்டபிள் வேலை
இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் 60 கான்ஸ்டபிள், ஹெட் கான்ஸ்டபிள் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பிளஸ்டூ முடித்து.
மோட்டார் மெக்கானிக் துறையில் ஐ.டி.ஐ. சான்றிதழுடன் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது ஆட்டோமொபைல் என்ஜினியரிங் துறையில் மூன்றாண்டுகள் டிப்ளமோ முடித்வர்களிடமிருந்து பிப்.7க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.itbpolice.nic.in/statics/news என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இஸ்ரோவில் 106 சயின்டிஸ்ட், என்ஜினியர் வேலை
இந்திய விண்ணவெளி ஆராய்ச்சி மையத்தில்(இஸ்ரோ) நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.isro.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
நர்சிங் படித்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் 1126 ஸ்டாப் நர்ஸ் வேலை
உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவனையில் காலியாக உள்ள 1126 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 4 ஆண்டு பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் வரும் மார்ச் 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
என்எம்டிசி நிறுவனத்தில் 44 பராமரிப்பு உதவியாளர் வேலை
என்எம்டிசி என அழைக்கப்படும் தேசிய தாதுவள மேம்பாட்டு கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 44 மெயின்டனன்ஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு www.nmdc.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கடற்படை அலுவலக கேன்டீனில் வேலை
இந்திய கடற்படையில் "Defence Account" பிரிவில் காலியாக உள்ள 10 கேன்டீன் உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் 25க்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்கள் அறிய www.davp.nic.in/WriteReadData?ADS/eng_10702_11_0301_1718b.pdf என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளவும்.
மத்திய நீர் ஆணையத்தில் 22 வேலை
பாட்னாவில் உள்ள "Central Water Commission" உள்ள காலியாக உள்ள 22 ஸ்கில்டு வொர்க் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்கள் அறிய www.cmc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சிண்டிகேட் வங்கியில் 500 புரபஷெனரி அதிகாரி வேலை
இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் இந்திய அரசுக்கு சொந்தமான பழமையான மற்றும் மிகப்பெரிய வணிக வங்கிகளில் ஒன்று சிண்டிகேட் வங்கி. மணிப்பாலை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான சிண்டிகேட் வங்கியில் (Syndicate Bank) காலியாக உள்ள 500 புரபஷெனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிருந்து வரும் பிப்.17க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/RecruitmentFiles/PGDBF_ADVERTISEMENT_2018-2019_27122017.pdf என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
SAIL நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை
புதுதில்லியில் செயல்பட்டு வரும் "Steel Authority of India Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 382 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
பவர்கிரிட் நிறுவனத்தில் 150 அசிஸ்டென்ட் என்ஜினியர் பணி
பவர்கிரிட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 150 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கு 17.2.2018 கடைசியாகும்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யின் தெற்கு மண்டல கிளையில் காலியாக உள்ள 98 நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கு 10.2.2018
உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
நீதிமன்றங்களின் தலைமை நீதிமன்றமான இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 15 உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.supremecourtofindia.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் 131 ஆப்ரேட்டர் வேலை
லக்னோவில் செயல்பட்டு வரும் "Hindustan Aeronautics Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 131 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 14க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 58 ஜூனியர் ஆபரேட்டர் வேலை
இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யில் நிரப்பப்பட உள்ள 58 ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 10க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு: https://www.iocl.com/download/EmploymentNews-matter.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 98 நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி வேலை
இந்திய எண்ணெய் கழக நிறுவனமான ஐ.ஓ.சி.எல்-யின் தெற்கு மண்டல கிளையில் காலியாக உள்ள 98 நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 10க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தெற்கு ரயில்வேயின் சென்னை பணிமனையில் 737 வேலை
தெற்கு ரயில்வேயின் சென்னையில் நிரப்பப்பட உள்ள 737 தொழில்பழகுநர் பயிற்சியிடங்களுக்கு 10, +2, ஐடிஐ முடித்த இளைஞர்களிடமிருந்து வரும் 23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1516796744237-001-CW-PER-ActApp%20Notification-2018-SIGNED%20COPY.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 624 அப்ரண்டிஸ் பயிற்சி
சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் நிரப்பப்பட 624 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு வரும் 23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பள்ளியில் ஆசிரியர் வேலை
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் "HAL New Public School" நிரப்பப்பட உள்ள 17 ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்.7க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hal-india.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்க்கவும்.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை
பொதுத்துறை நிறுவனமான "Numaligarh Refinery Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 21 பட்டதாரி என்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வரும் 23க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய www.nrl.co.in என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இந்திய விமானப்படையில் கிளார்க் வேலை
பெங்களூருவில் உள்ள இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள 9 குரூப் சி பணியிடங்களுக்கு வரும் 23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் டூ, பத்தாம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
மேலும் விவரங்கள் அறிய www.davp.nic.in/WriteReadData?ADS/eng_10801_11_0083_1718b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தெற்கு ரயில்வேயின் திருச்சி பணிமனையில் 763 அப்ரண்டிஸ் வேலை
தெற்கு ரயில்வேயின் திருச்சி நிரப்பப்பட உள்ள 763 தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 21க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1483521730664-combined_notification_2016_17.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தெற்கு ரயில்வேயின் கோவை பணிமனையில் 457 வேலை
தெற்கு ரயில்வேயின் கோவை பணிமனையில் நிரப்பப்பட உள்ள 457 தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 22க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1516788330449-ptj-act-apprentice-notification-2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விவசாய பல்கலைக்கழகங்களில் 195 விரிவுரையாளர் வேலை
இந்தியா முழுவதும் உள்ள விவசாய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 195 விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மார்ச் 2க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.asrb.org.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.
என்சிசி வீரர்ககளுக்கு ராணுவத்தில் 55 பணியிடங்களுக்கு அழைப்பு
என்.சி.சி. 44-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் பயிற்சியுடன் அளிக்கப்பட உள்ள 55 பணியிடங்களுக்கு என்.சி.சி. வீரர்களிடமிருந்து வரும் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சட்டம் படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை
ஜேக் என்ட்ரி ஸ்கீம் (21) என்ற பயிற்சியின் அடிப்படையில் ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 14 பணியிடங்களுக்கு சட்டம் படித்த இருபாலர்களிடமிருந்து வரும் 13க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதற்கான அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் 20 டெக்னிக்கல் உதவியாளர் வேலை
புதுதில்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்ரி உள்பட 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன தற்போது காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (செக்ரி) சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி, டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் பெண் மருத்துவ அதிகாரி உள்பட 20 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்கள் அறிய http://cecri.res.in/jobs/Sci_TA_FMO_Advt_01_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தேசிய நெடுஞ்சாலைதுறையில் 223 சிவில் என்ஜினியர் வேலை
தேசிய நெடுஞ்சாலையில் காலியாக உள்ள 223 துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து பிப்ரவரி 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்கள் அறிய http://www.nhai.org/Doc/10jan18/Advertisement%20DGM%20(T)Manager%20(T).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
No comments: