பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 192 என்ஜினியர் வேலை!!!
பொதுத்துறை நிறுவனமான "Bharat Electronics Limited" நிறுவனத்தில் காலியாக உள்ள துணை பொறியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 192
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரானிக்ஸ் - 184
2. மெக்கானிக்கல் - 08
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்: பெங்களூரு, தில்லி, முப்பை, கொல்கத்தா, குவாகத்தி. நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதிகொண்ட ரயில் கட்டணம் வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2017
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments: