TET Pass - நிரந்தர பணியிடம் - தலைமை ஆசிரியர் தேவை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சரகம், ஆத்திரம்பட்டியில் உள்ள நேதாஜி அரசு உதவி பெறும் (சிறுபான்மையற்ற) தொடக்கப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
பணியின் பெயர்:
தொடக்கப்பள்ளி நிரந்தர தலைமை ஆசிரியர்.
தகுதி மற்றும் நிபந்தனைகள்கல்வித்தகுதி:
இடைநிலை ஆசிரியர் (D.T.Ed) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET Paper-1) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இனச் சுழற்சி: பொதுப் பிரிவு (GT - General Turn). ஊதியம்: அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதம் மற்றும் படிகள் வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அவசியம்.
முக்கியமான தேதிவிண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 26.10.2026
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
செயலர்,
நேதாஜி அரசு உதவி பெறும் (சிறுபான்மையற்ற) தொடக்கப்பள்ளி,
ஆத்திரம்பட்டி, திருப்பத்தூர் சரகம்,
சிவகங்கை மாவட்டம் - 622409.


No comments: