சமூக நலத்துறை வேலை - 13 பணியிடங்கள் - Last Date to Apply 31.10.2025
சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 13 பணியிடங்கள்; குறைந்தபட்ச தகுதி முதல் டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
மைய நிர்வாகி
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: (Master's Degree in Social Work (Master's Degree in Social Work /Psychology/ Counselling Psychology/ Development Management படித்திருக்க வேண்டும். மேலும் 1-4 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,000
மூத்த ஆலோசகர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master's Degree in Social Work/ M.SC (Counselling Psychology)படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 22,000
தகவல் தொழில்நுட்ப பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Tech., B.Sc மற்றும் Diploma in Computer/ IT படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ரூ. 20,000
வழக்குப் பணியாளர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: Bachelor's Degree in Social Work/ M.SC (Counselling Psychology) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
பாதுகாப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பாளராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
பன்முக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
எட்டாவது தளம்,
சிங்காரவேலர் மாளிகை,
இராஜாஜி சாலை, சென்னை – 600001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
No comments: