ஆவின் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு - மொத்த காலியிடம் 10
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் (The Salem District Co-operative Milk Producers’ Union Ltd) தற்பொழுது வேலைவாய்ப்பு பயிற்சி அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Laboratory Assistant பணிக்காக தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக (National Apprenticeship Promotion Scheme (NAPS) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் ஆவின் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். 25 மாத பயிற்சி காலத்தில் (6 மாதம் அடிப்படை பயிற்சியும் அதன் பிறகு மீதமுள்ள 19 மாதம் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்) இந்த பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடத்தப்படும். சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு பயிற்சி பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு apprenticeshipindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.
அறிவிப்பு விவரம்:
நிறுவனம் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் (The Salem District Co-operative Milk Producers’ Union Ltd)
பணி - Laboratory Assistant
மொத்த காலியிடம் - 10
பயிற்சியின் போது ஊதியம் - Rs.6,000 to Rs. 8,050/-
விண்ணப்பிக்க கடைசி தேதி - Updated Soon
பணியிடம் -சேலம்
அதிகாரப்பூர்வ இணையதளம் - apprenticeshipindia.org
கல்வி தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பயிற்சி காலம்:
Laboratory Assistant பணிக்கு:
Basic Training Duration – 06 Months
On the Job Training Duration – 19 Months
இந்த பயிற்சியானது வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்ப முறை:
ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
ஆவின் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
apprenticeshipindia.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Apprentice பயிற்சிக்கான அறிவிப்பை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யவும்.
Click Here To Download - Official Notification & Apply Link
No comments: