தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!!!
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Technical Assistant பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை ஆராய்ந்து விட்டு அதன் படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் – TANUVAS
பணியின் பெயர் – Technical Assistant
பணியிடங்கள் – 01
நேர்காணல் தேதி – 25.08.2021
பல்கலைக்கழக பணியிடங்கள் :
TANUVAS பல்கலைக்கழகத்தில் Technical Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TANUVAS கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் B.Sc/ M.Sc (Life Science) அல்லது B.Tech/ M.Tech (Biotech) அல்லது PG Diploma in Bioinformatics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 25.08.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி :
Bioinformatics Centre & ARIS Cell, Madras Veterinary College, Chennai-600007.
TANUVAS Notification 2021
No comments: