தமிழக அரசு வேலைவாய்ப்பு – 555 காலிப்பணியிடங்கள் - ஊதியம் தினசரி ரூ.750
தமிழக அரசின் கீழ் செயலாற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 555 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் - Dispenser & Therapeutic Assistant
பணியிடங்கள் - 555
கடைசி தேதி - 25.08.2021
Dispenser – 420 பணியிடங்கள்
Therapeutic Assistant (Male) – 53 பணியிடங்கள்
Therapeutic Assistant (Female) – 82 பணியிடங்கள்
Dispenser வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Dispenser – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடங்களில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Therapeutic Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Nursing Therapy பாடப்பிரிவில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.375/- முதல் அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் தங்கள் மதிப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Click Here To Download - TN Health Job Notification 1 - Pdf
Click Here To Download - TN Health Job Notification 2 - Pdf
No comments: