தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்

Recent Posts

Subscribe

VACCANT IN VIJAYA BANK - LAST DATE 27-4-2018

Sunday, 15 April 2018

விஜயா வங்கியில் அதிகாரி பணிகள்

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று விஜயா வங்கி. 2135 கிளைகள் மற்றும் 16 ஆயிரத்து 138 பணியாளர்களுடன் செயல்படும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாகும்.


தற்போது இந்த வங்கியில் மேலாளர்( சார்ட்டடு அக்கவுண்டன்ட்), மேலாளர் (சட்டம்), மேலாளர் (பாதுகாப்பு) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சி.ஏ. பணிகளுக்கு 32 இடங்களும், சட்ட அதிகாரி பணிக்கு 21 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்க முடியும். 1-3-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது. சி.ஏ. இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சட்ட பட்டதாரிகள் அந்தந்த பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து துணை ராணுவம் அல்லது ராணுவம் அல்லது காவல் துறை போன்றவற்றில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம்செலுத்தினால் போதுமானது. 

27-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்ப நகலை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 4-5-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.vijayabank.com

No comments:

Post a Comment